திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முறையான விசாரணை செய்து யாராக இருந்தாலும் கைது செய்வோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல்நிலை குறித்து முறையாக அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக கூறினார். அதே நேரத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை செய்து யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ஸ்டாலின், அது திமுக ஆட்சிக்கு தொடக்க புள்ளியாக அமையட்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments