Tamil Sanjikai

புகழ்பெற்ற அமெரிக்க பாடகியும், நடிகையுமான ரிஹானாவும் பென்டி பியுட்டி என்ற பெயரில் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனம் ஒன்றை 2017–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். மேலும் உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் இவர் சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரிஹானாவின் பெயரை அவரது அனுமதியின்றி, அவரது தந்தை ரொனால்டு பென்டியும், அவரது கூட்டாளியுமான மோசஸ் பெர்கின்சும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனத்துக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை நிறுத்திக்கொள்ளுமாறு ரிஹானா பல முறை கூறியும், அவர்கள் செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தந்தை ரொனால்டு பென்டிமற்றும் அவரது கூட்டாளி மோசஸ் பெர்கின்ஸ் ஆகியோர் மீது ரிஹானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

0 Comments

Write A Comment