ஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற புகாரில் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீல்ஸ் ஹொகல் (Niels Hoegel) என்ற 42வயதான ஆண் செவிலியர் 2000 - 2005 ஆண்டு வரை 85 நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து 10 ஆண்டுகள் சிறையில் இருந்த அவன் பணிக்காலத்தில் மேலும் 6 கொலைகள் செய்தது கண்டறியப்பட்டது. அவன் கொலை செய்தோரின் எண்ணிக்கை 200ஐ கடக்கும் என கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் நீல்ஸ் மன்னிப்பு கோரிய நிலையில், அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் போர்க்காலத்துக்கு பிந்தைய வரலாற்றில் அதிக கொலை செய்த கொடூர கொலையாளி நீல்ஸ் இறக்கும் வரையில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
0 Comments