Tamil Sanjikai

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ரஷ்யாவில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மஞ்சுராணி. ஆனால், இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவுடன் மோதி தோல்வியை தழுவினார் . ரஷ்யா வீராங்கனை 4-1க்கு என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். இதையடுத்து மஞ்சுராணி வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் மஞ்சு ராணி மட்டுமே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment