ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதமடைந்துள்ளன.
கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பபட்டுள்ளது. இதனால் தரைப்பாலம், சாலைகள் போன்றவை சேதமடைந்தன. இந்நிலையில் ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், தொங்கு பாலத்தில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட ஏணி படிகள், 3 மின் கம்பங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சீராக இல்லாததால் இன்று 7வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments