Tamil Sanjikai

சத்தீஸ்கரில், சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட சிறுவனை, 8 கி.மீ., துாரம் கட்டிலில் சுமந்து சென்று, சிகிகச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், கொண்டாசாவில் கிராமத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட, 13 வயது சிறுவன் அங்கு சரியான மருத்துவ வசதி இல்லாததால்,சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தான்.

அந்த சிறுவனை கயிற்று கட்டிலில் அமரவைத்து தோளில் சுமந்து சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 8 கி.மீ., துாரம் நடந்தே சென்று, அவர்களின் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவரிடம் சிறுவனை காண்பித்து, அவனுக்கு சிகிச்சை அளிக்கச் செய்தனர்.

தற்போது அந்த சிறுவனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், சிஆர்பிஎப் வீரர்களின் உதவியாலேயே அந்த சிறுவன் உயிர் பிழைத்திருப்பதாகவும், கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சி.ஆர்.பி.எப் வீரர்களின் இந்த செயலுக்கு நாடு முழுவதுமிருந்து இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ண உள்ளன.

0 Comments

Write A Comment