Tamil Sanjikai

இலங்கையில் 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, இலங்கை அரசு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "தங்களது அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள இலங்கை அரசு தடை விதித்தது.

இந்நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய 3
இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்புடன் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரையடுத்து இலங்கை அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

0 Comments

Write A Comment