Tamil Sanjikai

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை, அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி, சிறு வணிக கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் திருமண நிதி உதவி திட்டம், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின், மகளிர் சுய உதவி குழுக்களைப் போன்று, இளைஞர் சுய உதவிக் குழுக்கள், முதியோர் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க நடவடிக்கை, ஏழை மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவச கையடக்க கணினி வழங்கப்படும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு சீரமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை டிடிவி தினகரன் வழங்கியிருக்கிறார்.

0 Comments

Write A Comment