Tamil Sanjikai

96 வயது பாட்டி, தேர்வில் வெற்றி!

கேரளாவில் அக்ஷரலக்ஷம் என்ற திட்டத்தை மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேர்வுளும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்பவர்களின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு அறிவு மற்றும் கணித அறிவு உள்ளிட்டவைக்கு சோதனை தேர்வு வைக்கப்படும் . அதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு "எழுத்தறிவு பெற்றவர்" என்று சான்றிதழ் வழங்கப்படும்.

தற்போது, இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை முடித்தவர்களில் 42, 933 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்வை எழுதிய ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த, 96 வயதான பாட்டி கார்த்தியானி 100-க்கு 98 மார்க் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கார்த்தியானி பாட்டிக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

0 Comments

Write A Comment