Tamil Sanjikai

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளான். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். ஓட்டப்பந்தயத்தில் அவனுடன் ஓடியமற்ற சிறுவர்கள் பாதி மைதானத்தை தொடுவதற்குள்ளாக ருடால்ப் குறிப்பிட்ட இலக்கை ஓடி முடித்துவிடுகிறான்.

சிறுவனின் இந்த ஓட்டம் உலகின் வேகமான மனிதன் என்று பெயரெடுத்த உசேன் போல்ட் வேகத்திற்கு இணையானது என்று உடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரக்பி விளையாட்டிலும் ருடால்ப் தன்னிகரற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment