ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. தனியாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த 3 வருடங்களுக்கு முன் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் கட்டணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்கும் வகையில் பா.ஜ.க. அரசு இந்நடைமுறையை செயல்படுத்தியது.
இந்த நடைமுறை செயல்படுத்துவதற்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.40 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.20 சேவை கட்டணம் வசூலித்து வந்தது.
ஆன்லைன் சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016-17ம் நிதியாண்டில் 26 சதவீதம் அளவிற்கு ஆன்லைன் வழியேயான வருவாயில் இழப்பு ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments