உத்தரபிரதேசத்தில் உள்ள பிரக்யராஜ் மாவட்டத்தில், 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய மாநில அரசு தடை விதித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்யராஜ் பகுதியில், 2019 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கும்பமேளா, புத்த பூர்ணிமா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன, அதனால் கங்கையில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அதனால் இந்த மூன்று மாதத்தில் திருமண நிகழ்ச்சில் நடத்த அந்த அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக பிரக்யராஜில், திருமண மண்டபங்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநில அரசு, முன்பதிவு செய்திருந்தால் ரத்து செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. எனினும் திருமணம் செய்ய 3 மாதங்களுக்கு தடை விதித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திடீர் உத்தரவால் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமணத்திற்கான தேதியை மாற்றி உள்ளதாகவும் பலர் வேறு மாவட்டத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 Comments