Tamil Sanjikai

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கானிற்கு தடைவிதிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, பிரான்ஸ் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அவரின் உரையாற்றலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில், கடந்த செப் 24., அன்று, பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கான் உரையாற்றவிருந்த நிலையில், அது இந்தியாவின் தனித்துவத்தை பாதிக்கும் எனக் கூறி, அவரை உரையாற்ற அனுமதியளிக்க வேண்டாம் என பிரான்ஸ் அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இது குறித்து இந்தியாவின் தரப்பில் கூறுகையில், "காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஓர் அங்கம் என்பதில் எந்த மாற்றமும் என்றைக்கும் கிடையாது. அப்படியிருக்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவர், காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கு வெளியே உரையாற்றுவது இந்தியாவின் தனிதன்மை மற்றும் சுய மரியாதைக்கு பாதிப்பு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். எனவே, மன்சூத் கான் அங்கு உரையாற்றுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. இதை பிரான்ஸ் புரிந்துக் கொள்ளும் என்று கருதுகிறோம்" என இந்திய தரப்பிலிருந்து, பிரான்ஸ் அரசிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட பிரான்ஸ் அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபரின் உரையாற்றலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின், 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. பாகிஸ்தான் பயங்கரவாதியான ஜெய்ஷ் இ முஹமத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கருத்துக்கு, 5 உறுப்பினர்களுள் முதலில் ஆதரவு தெரிவித்தது பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது, சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்தியாவின் கருத்துக்களுக்கு பிரான்ஸ் எப்போதும் முக்கியத்துவம் அளித்துள்ளது..

0 Comments

Write A Comment