உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை ,எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய தமிழ்நாட்டில் இருந்தும், தெலுங்கானாவில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வாரணாசி சென்றனர். இவர்களில் பலரை வேட்புமனு தாக்கல் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்த 24 விவசாயிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாரணாசி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப் பட்டது.
இதுகுறித்து அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறுகையில், பிரதமரை எதிர்த்து அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியாது என்பதால் விவசாயிகளின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்து இருப்பதாகவும், எனவே போட்டியிட விரும்பும் அனைவரிடமும் வேட்புமனுக்களை பெற வேண்டும் என்பதற்காக வாரணாசி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க கோரி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
0 Comments