Tamil Sanjikai

பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கடந்த மாதம் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா ஸ்கைப் மூலம் உரையாடினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது எனவும் இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். இந்திய அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவராகம் தொடர்பாக தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது.

இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல அரசியல் கட்சிகள் அண்மையில் சந்தேகத்துக்குரிய கேள்விகள் எழும்பின. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் வருகின்றன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் இன்று முறையிட உள்ளன. தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளது.

0 Comments

Write A Comment