Tamil Sanjikai

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், ஆணும் பெண்ணும் செல்போனில் பேசிக்கொள்வது மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது இயல்பான விஷயம். ஆனால், அதுவே அபுதாபியை சேர்ந்த இளைஞர் ஒருவரருக்கு வினையாக முடிந்திருக்கிறது.

அபுதாபியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தினமும் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அந்த பெண்ணை விளையாட்டாக ‘முட்டாள்’ (அராபியில் - ஹப்லா) என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், இளைஞர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இளைஞருக்கு 60 நாள் சிறை தண்டனையும் 20000 திராம்கள் ( இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ) அபராதமும் விதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞரிடம் வினவியபோது அபுதாபியில், சமூகவலைதளங்களில் ஒருவர் மனது புண்படும்படி குறிஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது செய்தி பதிவிட்டாலோ அது சைபர் குற்றம் என தெரிவித்தார்.

0 Comments

Write A Comment