சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்
பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவடந்தை சென்றார் பிரதமர் மோடி..!
பிரதமர் தனது டுவிட்டரில்,
அற்புதமான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என கூறி உள்ளார்.
0 Comments