Tamil Sanjikai

தமிழகத்தில் 15.50 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், மேற்படிப்புகள் படிப்பதற்கு இந்த மடிக்கணினி பெரிதும் உதவியாக உள்ளது. அந்த வகையில் 15.50 லட்சம் மடிக்கணினிகளை உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் இந்த ஆண்டு 11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், 2017-18, 2018-19 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment