ஐ.நா. முன்னேற்றத் திட்ட நல்லெண்ணத் தூதராக தமிழகத்தில் பிறந்த அமெரிக்கவாழ் இந்தியரான பத்மலக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சென்னையில் பிறந்த அவர் தமது தாயின் மருத்துவப் பணியை ஒட்டி அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்தார். படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங் செய்ய தொடங்கிய இவர் பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கியதுடன் ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் , திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். உணவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர், டாப் செஃப் நிறுவனத்தின் செயலதிகாரி உள்ளிட்ட பல பொறுப்புக்களை வகிக்கும் இவர்சிறந்த ஐக்கிய நாடுகள் சபை முன்னேற்ற திட்டத்துக்கான நல்லெண்ணத் தூதரக நேற்று அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு நாடுகளில் ஏழ்மை ஒழிந்தாலும் பாலினம், வயது, இனம் ஆகியவற்றின் கீழான பாகுபாடு ஒழியவில்லை என்றார். உலகில் பல பெண்கள் இன்றளவும் சில மோசமான பாகுபாட்டால் துன்பங்களை சந்தித்து வருவதை மகளிர் தினத்தை ஒட்டி நினைவு கூர்வதாகவும் ஐ.நா. முன்னேற்றத் திட்ட நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
0 Comments