திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வமுள்ளவர் நடிகர் அஜித்குமார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகர பணியாற்றி வரும் அஜித் தனது தக்ஷா குழுவினரோடு சேர்ந்து இந்திய அளவில் பல சாதனைகளை புரிந்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்த பின்னர், தன் குடும்பத்துடன் ஒரு வாரம் செலவிட்ட அஜித் பின்னர், வெளிநாடு சென்றதாக தகவல்கள் வெளியானது.
அதனைத்தொடர்ந்து, அஜித் ஜெர்மனி சென்றிருக்கிறார் எனவும் அங்கு ஆளில்லா விமானமான ட்ரோன் குட்டி விமானத்தை இயக்குவதற்கு மற்றும் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை ஜெர்மனியில் கற்று வருகிறார் எனவும் செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
0 Comments