Tamil Sanjikai

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ (prank video) ஸ்டார் கங்குவா ரென். இவரை பல லட்சம் பேர் யூடியூப்பில் பின்தொடர்கின்றனர். அதிக அளவிலான ரசிகர் பட்டாளமும் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடத்திய பிராங்க் ஷோ ஒன்றில், வசிக்க வீடுகூட இல்லாமல் தெருவில் அமர்ந்திருந்த 52 வயதுடைய முதியவர் ஒருவருக்கு உணவு அளிப்பதாக கூறி பிஸ்கெட் பாக்கெட்டினை வழங்கியுள்ளார்.

அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு, முதியவரும் நன்றி கூறி சாப்பிட தொடங்கினார். பசியால் பிஸ்கெட் முழுவதும் தின்றுவிட்டார். இதனை கங்குவா ரென் வீடியோவும் எடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே முதியவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அப்பகுதி போலீசார், உடனடியாக கங்குவா ரென்னை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நடந்த விவரத்தை கூறவே, கோர்ட்டில் ரென்னுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 22,300 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்) தொகையாக அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment