Tamil Sanjikai

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் இந்தியா!

நவம்பர் 2- ம் தேதி 'பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலை பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றுள்ளது. கடந்த 11 ஆண்டாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது. இதில் இந்தியா 14 வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில் தீர்க்கப்படாத 18 வழக்குகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. பத்திரிகையாளர்களின் கொலையாளிகளை தண்டிக்கப்படாத பட்டியல் 14 நாடுகளை கொண்டது. இதில் 2 -வது இடம் சிரியா, 3-வது இடம் ஈராக், 4-வது இடம் தெற்கு சூடன், 5- வது இடம் பிலிப்பைன்ஸ், 6 -வது இடம் ஆப்கானிஸ்தான், 7- வது இடம் மெக்சிகோ,8-வது இடம் கொலம்பியா, அதனை தொடர்ந்து பாகிஸ்தான்,பிரேசில் ரஷ்யா, வங்காளதேசம், நைஜிரீயா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் ஒரு சதவீதம் தீர்க்கப்படாத பத்திரிகையாளர் படுகொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் மூலம் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 1, 2008 மற்றும் ஆகஸ்ட் 31, 2018 வரை ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்களின் படுகொலைகளின் தரவை பகுப்பாய்வு செய்து சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 5 தீர்க்கப்படாத வழக்குகள் கொண்ட அந்த நாடுகள் மட்டுமே குழுவால் பரிசீலிக்கப்பட்டன.

0 Comments

Write A Comment