அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட்டர் மார்த்தா மெக்கல்லி. இவர் ராணுவத்தில் விமானபடையில் பணியாற்றியவர் ஆவார். தான் ராணுவத்தில் பணியாற்றும் பொது பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக செனட் ஆயுதப்படை துணை கமிஷனின் விசாரணையின் போது மெக்கல்லி தெரிவித்து உள்ளார்.
நானும் உங்களை போன்று ராணுவத்தில் பாலியல் தாக்குதலில் உயிர் பிழைத்தவராக இருக்கிறேன். ஒரு உயர் அதிகாரியால் கற்பழிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஆனால் நான் புகார் செய்யவில்லை, அவ்வாறு செய்ய சிஸ்டத்தை நான் நம்பவில்லை.
பல பாதிக்கப்பட்டவர்களை போல, நானும் பலமுறை சிஸ்டத்தால் பாதிக்கபட்டேன். ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
நாம் ராணுவ பாலியல் தாக்குதலை நிறுத்த திட்டம் உள்ளது. ஆனால் நாம் அதில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
0 Comments