குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் கூட்டப்பட்டது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்த்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார், மேலும் ஆளும் பிஜேபி அரசு, அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் லிமிடெட்டிற்கு பாதுகாப்பு ஒப்பந்தத்தை வழங்காமல் பாதுகாப்புத் துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபஃன்னெஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் ரபேல் ஜெட் ஒப்பந்தம் குறித்தான விவாத்திலிருந்து காங்கிரஸ் ‘ஓடி'விடுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிஜார்ஜுன் கார்கே ‘காங்கிரஸ் கட்சி இந்த சவாலை ஏற்படாகவும். அதன்படி ஜனவரி 2 அன்று ரபேல் ஒப்பந்தம் குறித்தான ஒப்பந்தத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மாகஜனிடம் இதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “ஜெட்லி கொடுத்த சவாலை ஏற்கிறோம். ஜனவரி 2ஆம் தேதி விவாதத்திற்கு தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
0 Comments