Tamil Sanjikai

நிரவ் மோடி லண்டனின் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நிரவ் மோடி, ஸ்காட்லேண்ட் யார்ட் போலீசாரால் நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, லண்டனின் மிகப்பெரிய சிறையான வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அதிக ஆபத்தானவர்கள் என்று வகைப்படுத்தப்படாத B கிளாஸ் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த சிறையில் மொத்தம் ஆயிரத்து 400 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிகுந்த கட்டுப்பாடுகளால் பிரிட்டனின் மோசமான சிறை என அழைக்கப்படும் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் சிறை அறைக்குள் தான் இருக்க வேண்டும். வார இறுதி நாட்களில் இந்நேரம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கைதிகள் சிலர் எப்போதும் காயங்களுடன் தான் இருப்பார்கள்என்றும் அச்சிறையைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த மாதம் ஒரு சிறைக் கைதி தப்பிவிட்டதால் அங்கு கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் கடைப்பிடிககப்படுகிறது. சொகுசான வாழ்க்கை வாழ்ந்த வைர வியாபாரி நிரவ் மோடிக்கு இந்தியாவுக்கு நாடு கடத்தும் முன்பே தண்டனை தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment