அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதோடு, தனக்கு சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார்..
ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கு சமூக வலைத்தளம் மூலம் 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையேபழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமிக்கு விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதாக கூறி தனது சொந்த விமானத்தில் சிறுமியை அவர் அழைத்து சென்றார்.
விமானத்தில் ஸ்டீபன் பிராட்லே மெல்லும், சிறுமியும் மட்டும் இருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஸ்டீபன் பிராட்லே மெல், விமானம் தானாக இயங்கும்படி (auto pilot mode) செய்துவிட்டு சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்தார்.
இந்த சம்பவம் ஸ்டீபன் பிராட்லே மெல்லின் மனைவியின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஸ்டீபன் பிராட்லே மெல், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
0 Comments