மும்பையில் இருப்பதைவிட தமிழகம் பிடித்திருப்பதால் சென்னையில் குடியேற விரும்புவதாக, பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு, மெட்ராஸ் பார் அசோசியேஷன் பிரிவு உபசார விழா நடத்தியது.
இதில் பேசிய முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, 'நானும் என் கணவரும் சென்னையில் குடியேற முடிவெடுத்துள்ளோம். மும்பையை ஒப்பிடும்போது சென்னை சிறப்பாக உள்ளது. சென்னை பருவநிலை, சாலை வசதி உள்ளிட்டவை என்னை ஈர்த்துள்ளன. ஓராண்டுக்கு மேலான காலத்தில் 5,040 வழக்குகளை முடித்து வைத்ததை நியாயமாகவே கருதுகிறேன். தலைமை நீதிபதியாக இருந்தபோதும், இடமாற்ற உத்தரவுக்கு பிறகும் ஆதரவளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் பேசியுள்ளார்.
மேகாலயாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments