நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்ககளில் அருவிகளில் தண்ணீர் அதிகரித்து நல்ல குளுமையான சூழ்நிலையும் காணப்படும். இதனால் இந்த மூன்று மாதங்களிலும் பல்வேறு இடங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் குற்றாலத்துக்கு படை எடுத்து வருவர்.
இதேபோல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் குற்றாலத்தில் இரண்டாம் கட்ட சீசன் காலங்களில் குறிப்பாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி விட்டு செல்வது வழக்கம் இதனால் இரண்டாம் கட்ட சீசன் காலங்களைப் போலவே அருவிக் கரை பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும். தற்போதைய பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் கணிசமான தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வார விடுமுறை தினத்தில் இதமான சூழ்நிலையிலும் மிதமான தண்ணீரும் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குற்றாலத்தில் அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாட்கள் என்பதால் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையைவிட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments