Tamil Sanjikai

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரெண்டே நாட்களில் உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.

கற்பனை உருவம் கொடுக்கப்பட்ட அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.

அவெஞ்சர்ஸ் என்றாலே உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தானாகவே பொங்கி விடும். இதற்கு உச்சகட்ட சாட்சியாகியுள்ளது வியாழன் அன்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம்.

வியாழன் அன்று வெளிநாடுகளிலும், வெள்ளி அன்று இந்தியாவிலும் வெளியான இப்படம் முதல் நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியது, இரண்டு நாள் முடிவில் 2 ஆயிரத்து 130 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் 53 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.

0 Comments

Write A Comment