இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜக்மீத் சிங், இவர் கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.
புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தலையில் டர்பன் அணிந்து நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைந்தபோது பலத்த கைத்தட்டல்களுடன் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய அவர், நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.
0 Comments