Tamil Sanjikai

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து கேரள மாணவி பாவனா என். சிவதாஸ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. cbseresults.nic.in cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாவனா என். சிவதாஸ் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இந்த தேர்வில் 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.85% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடமும், 99% தேர்ச்சியுடன் சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 95.89% அஜ்மீர் உள்ளது. கடந்தாண்டு 86.70% தேர்ச்சி விகிதம் இருந்த நிலையில் தற்போது 91.10% ஆக தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 21 முதல் மார்ச் 29 -ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத்தேர்வை, நாடு முழுவதும் 18 லட்ச மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

0 Comments

Write A Comment