சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரம் புது பொலிவுடன் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று முன் தினம் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து மாமல்லபுரம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக வண்ண விளக்குகளால் ஜொலித்த மாமல்லபுரத்தை காண பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்தனர், இந்நிலையில் நேற்று அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்த 2 நாட்களாக மின்னொளியில் ஜொலித்த மாமல்லபுரம் தொடர்ந்து அதேபோன்று மின்னொளியில் ஜொலிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
0 Comments