தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன் அந்த பதவியில் இருந்து திடீரென விலகி உள்ளார். அந்த பதவிக்கு அவர் சமீபத்தில் தான் சங்கத் தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் தமது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார்.
பதவியை ராஜினாமா செய்வது பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பார்த்திபன், அதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கூடி விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.
0 Comments