மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதால் இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொது செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 2 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே தங்கள் கட்சி தொண்டர் ஒருவரை பா.ஜ.க. குண்டர்கள் முதலில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதுடன், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அந்த மாநில மந்திரி ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார்.
இரு கட்சியினர் இடையே நடந்த மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வன்முறை பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
0 Comments