Tamil Sanjikai

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று, பள்ளிகல்வித் துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

மேலும், ‘2,381 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களுக்கு முன்பருவக் கல்வி சார்ந்த சிறப்பு பயிற்சி மற்றும் குழந்தை மைய சூழல் உருவாக்கப்படும். தனியார் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக்காக விரைவில் தொலைக்காட்சி தொடங்கப்படும். மாணவர்கள் வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

0 Comments

Write A Comment