யாஜிடி இனப் பெண்களுக்காகப் போராடிய ஈராக்கை சேர்ந்த நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நீங்கள் எதற்காக நோபல் பரிசு வாங்கினீர்கள்" என கேட்டது பார்வையாளர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
ஈரானில், ஐ.எஸ். அமைப்பால் அங்குள்ளவர்களுக்கு நடந்த கொடுமைகள் மற்றும் பெண்களின் பல மனரதியான போராட்டங்களுக்கான தீர்வுகளுக்காக போராடியதற்காக கடந்த ஆண்டு ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் என்ற பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மதச் சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவில் 3 நாட்கள் நடந்த மாநாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினர். அப்போது நாடியா தனது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பேசிக்கொண்டிருந்தார், அப்போது பாதியில் குறுக்கிட்ட டிரம்ப், "உங்களுக்குத்தானே நோபல் பரிசு கிடைத்தது? அது பாராட்டுக்குரியது. உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.
இதனை கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த நாடியா பின்னர் சுதாரித்துக் கொண்டு, பெண் அகதிகளின் மறுவாழ்வுக்காக தாம் உழைத்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த கேள்வியால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதேபோல அங்கு வந்திருந்த பலரையும் டிரம்ப்பினால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments