Tamil Sanjikai

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத்சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு மருத்துவக்குழுவினரின் கண்கானிப்பில் அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment