புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து. பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இந்தியா விமானப்படையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், ”இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், நம்மை பெருமை அடையச்செய்ய வைத்திருக்கிற இந்திய விமானப்படையின் தீரம் மிக்க விமானிகளுக்கு என் வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “ நமது விமானப்படை மற்றும் விமானிகளின் தீரச்செயலை நாங்கள் வணங்குகிறோம். நமது படை வீரர்களால் நாம் பெருமை அடைகிறோம். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments