ஒரு அணுகுண்டை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.
அபுதாபியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியதாவது- “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டது.இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது, ஒரு வேளை வருங்காலத்தில் இரு நாடுகளுக்கிடையே போர் வந்து நாம் (பாகிஸ்தான்) இந்தியாவை ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள்.
இந்தியாவை தாக்க ஒரேயொரு வழிதான் உள்ளது. நாம் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை அந்நாடு மீது வீச வேண்டும். அப்போதுதான் அவர்களால் நம்மை 20 அணு ஆயுதங்கள் மூலம் தாக்க முடியாது. அப்படி பாகிஸ்தான் அரசால் ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களை இந்தியாவை நோக்கி செலுத்த முடியுமா? இவ்வாறு முஷரப் பேசினார்.
0 Comments