மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்து நம்மை எல்லாம் பெருமை அடைய செய்ந்திருக்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் குத்துச்சண்டை வீரர்களுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார். மேலும் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார்.
2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் .இதையடுத்து மேரி கோமுக்கு பாராட்டுகள் பல குவிந்து வருகின்றன. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன என்றாலும், அவரது விளையாட்டு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது. இன்னும் பல பதக்கங்கள் அவருக்காக வரும் நாட்களில் காத்திருக்கின்றன.
0 Comments