Tamil Sanjikai

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன், ஒரு காலத்தில் தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் . அதனால் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட காரணத்தினால் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்று கூறி இருந்தார்.

மேலும் கூறுகையில் நான் குடிப்பது இல்லை, நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் என நாம் கூறிய பொழுது நான் மதுவுக்கு அடிமை என எப்படி செய்தி வருகிறது என நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

“குடிப்பழக்கம் இன்றைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நான் அதை அடிக்கடி செய்ய விரும்பவில்லை. நான் நிதானமான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன்.நான் குடிப்பவர்களுக்கு நியாயம் வழங்கவில்லை .

கிட்டத்தட்ட எல்லோரும் குடிக்கிறார்கள், ஆனால் யாரும் இதைப் பற்றி பேச விரும்புவது இல்லை.மக்கள் எப்போதாவது மது அருந்துவதாக ஒப்புக்கொள்கிறார்கள். நான் மது அருந்துவது இல்லை என்று நான் கூறும்போது, இது ஏன் வேறொன்றாக மாற்றப்படுகிறது? என கூறினார்.

0 Comments

Write A Comment