கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை மறைத்து வாழும் நிலையை ஒருபோதும் உருவாக்க கூடாது என்று, மக்களவையில் நதிநீர் பங்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தின்போது கர்நாடக எம்பியம் முன்னாள் நடிகையுமான சுமலதா பேசினார்.
மேலும், தண்ணீர் பிரச்னைகளை மத்திய அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று பேசிய அவர், ஐடி போன்ற முக்கிய தொழில்களின் மையமாக இருக்கும் பெங்களூருவுக்கு போதிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நதிநீர் பங்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பேசிய கேரள எம்பி பிரேமச்சந்திரன், ‘முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் தயக்கம் எதுவும் இல்லை ஆனால், தண்ணீர் வழங்கப்படுவதில் கேரள மாநில அரசின் சட்டத்திற்குட்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்’ என்றார். மேலும், வழக்குகள் மூலமாக மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என்றும் கேரள எம்பி பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments