கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது..
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டு ராவ், மற்றும் செயல் தலைவர் ஈஸ்வர் கண்டாரே ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
0 Comments