ராமநாதபுரத்தில் தாய், தந்தையை கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வழிமறிச்சாம் கிராமத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டில், பிரிந்துபோன மனைவியை சமாதானம் செய்து சேர்த்து வைக்காத கோபத்தில் தந்தை நடராஜன், தாய் கருப்பாயியை, மகன் ராமச்சந்திரன் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 Comments