மகாராஷ்டிராவில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது ஜீப் மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம், கலம்ப் தாலுகாவில் உள்ள வாஹாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த காம்ப்ளே என்பவரின் இல்லத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
நேற்று இரவு அந்த இரு குடும்பத்தினரும் தாங்கள் வந்த ஜீப்பில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
யவத்மால்-கலம்ப் தேசிய நெடுஞ்சாலையில் அந்த ஜீப் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து எரிவாயு ஏற்றிய இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் தாறுமாறாக சென்றது. அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜுப் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments