சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்.
சென்னையில் கடந்த ஜனவரியில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, ஹுண்டாய் நிறுவனத்தின் பேட்டரி கார் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
"கோனா" என பெயரிடப்பட்டுள்ள இந்த பேட்டரி கார், சென்னை அருகே ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கார் தொழிற்சாலைக்கு மட்டும் 7 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற கார்களை போன்று அனைத்து வசதிகளும் இந்த பேட்டரி காரிலும் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 மணி நேரம் வீட்டில் சாரஜ் செய்தால் 350 கிலோ மீட்டர் வரை வாகனத்தை ஓட்டமுடியும் திறன் உள்ளது என்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 1 மணி நேரம் சார்ஜ் செய்தாலும் போதுமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments