Tamil Sanjikai

சார்க் அமைப்பின் 8 உறுப்பு நாடுகள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடத்தும். இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய 8 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தியாவில் நிகழ்த்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, இந்தியாவிடமிருந்து எந்தவொரு நேர்மறையான பதிலையும் பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது என்றார்.

எனவே இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள சார்க் அமைப்புகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். ஏற்கனவே கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு சுஷ்மா ஸ்வராஜிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையும் அவர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment