Tamil Sanjikai

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன், நிலத்தின் ஈரப் பதத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரை வடிவமைத்துள்ளார்.

மாணவர் கணேஷின் இந்த கண்டுபிடிப்பை, நாகை வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் அலாவுதீன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இந்த பத்தாம் வகுப்பு மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அரசுக்கு ஆய்வு அறிக்கை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது கண்டுபிடிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் கணேஷ், வயலின் ஈரப் பதத்தை அறிந்து அதற்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பாய்ச்சும் வகையில், சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவில் மோட்டாரை வடிவமைத்துள்ளதாக கூறினார்.

0 Comments

Write A Comment