Tamil Sanjikai

தலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், காவல் துறையை சேர்ந்த சில காவலர்களே வாகன விதிகளை மதிப்பதில்லை என்று சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி சாலை விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குகளின் தன்மையைப் பொறுத்து காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மீதான வழக்குப்பதிவு குறித்த அறிக்கை அன்றாடம் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment