Tamil Sanjikai

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹஸில். இவர் வெளியிட்ட ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

33-வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார் . வழக்கம் போல், துணிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, நிப்சி ஹூஸல் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

பலமுறை அவரை நோக்கி சுடப்பட்டதில், நிப்சி ஹூசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். நிப்சி ஹூஸல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க திரைக்கலைஞர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment